புவனகிரி அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் விவசாயி கைது
புவனகிரி அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயி கைது செய்யப்பட்டார்.;
சிதம்பரம்,
புவனகிரி அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 50) விவசாயி. இவருடைய மனைவி விஜயாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-2 படிக்கும் மாணவி விஜயாவிற்கு உதவியாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியை சேகர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த மாணவி 4 மாத கர்ப்பமானார். இதுபற்றி மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.