மனைவியை கட்டையால் தாக்கிய விவசாயி கைது
மனைவியை கட்டையால் தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டனர்.
கரூர் அருகே உள்ள மண்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 46). விவசாயி. இவரது மனைவி வளர்மதி (38). இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஓராண்டாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சம்பவத்தன்று வளர்மதி தனது ஸ்கூட்டரில், பெரிய கவுண்டர்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளர்மதியை வழிமறித்த பொன்னுசாமி தகாதவார்த்தையால் திட்டி கட்டையால் தாக்கினர். இதில் காயம் அடைந்த வளர்மதி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிந்து, பொன்னுசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.