கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

பொன்னை அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2022-06-02 17:33 GMT

திருவலம்

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள எஸ்.என். பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, நாடகம் பார்க்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று காலை டி.எஸ்.பள்ளி என்ற ஊரின் அருகே உள்ள கிணறு ஒன்றில் பிணமாக கிடப்பதை சிலர் பார்த்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காட்பாடியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தாமோதரன் உடலை மீட்டனர். பொன்னை போலீசார் வழக்குப்பதிரு செய்து தாமோதரன் உடலை வேலூர் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்