திருவண்ணாமலையில் பக்தர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட போலி சாமியார்

திருவண்ணாமலை கிரிவலபாதையில் பக்தர்களிடம் போலி சாமியார் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்டார்.;

Update:2024-09-23 15:56 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வருவது வழக்கம். அந்த வகையில், கிரிவலம் வந்த பக்தர்களிடம் விபூதி பூசி விட்டு பணம் பறிக்கும் நோக்கில் கஞ்சா போதையில் போலி சாமியார் ஈடுபட்டுள்ளார்.

கையில் கற்களை தூக்கிக்கொண்டு இளைஞர்களையும், நடைபாதையில் கடை வைத்திருக்கும் நரிக்குறவர் சமூக பெண்ணையும் போலி சாமியார் தாக்க முயற்சி செய்தார். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணும் போலி சாமியாரை தாக்கி சட்டையை பிடித்து இழுத்து வந்து அடித்து உதைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பக்தர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் போலி சாமியார்கள் மீது திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்