குவாரியில் கல் ஏற்ற வந்த லாரியில் போலி உரிமம் சீட்டு

வடக்கு விஜயநாராயணம் அருகே குவாரியில் கல் ஏற்ற வந்த லாரிபோலி உரிமம் சீட்டு கொடுத்தது தொடர்பாக 3பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2023-04-11 21:54 GMT

இட்டமொழி:

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் அருகே இஸ்ரவேல் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் ஒசரவிளையை சேர்ந்த ராஜகோபால் மகன் ஆனந்த் (வயது 34) என்பவரது டாரஸ் லாரியில், பரப்பாடி அருகே உள்ள சவளைக்காரன்குளம் மகாராஜன் மகன் சுதந்திரபாண்டி (வயது 43), வேப்பன்குளம் வைரவன் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 45) ஆகியோர் கல் லோடு ஏற்ற வந்துள்ளனர்.

லோடு ஏற்றிவிட்டு உரிமம் சீட்டு பெறாமல் செல்ல முயற்சித்துள்ளனர். சந்தேகம் அடைந்த இஸ்ரவேல் பிரபாகரன் அவர்களிடம் விசாரித்த போது அவருடைய கல் குவாரி உரிமம் சீட்டு போலவே போலியாக அச்சடித்து கையெழுத்து போட்டு கொண்டு வந்துள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து இஸ்ரவேல் பிரபாகரன் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்கு பதிவு செய்தார். நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜி.கே.ராஜு மேல் விசாரணை நடத்தி 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்