அடகு கடையில் போலி நகை வைத்து

பரசேரி பகுதியில் அடகு கடையில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.70 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-08-14 16:35 GMT

திங்கள்சந்தை:

பரசேரி பகுதியில் அடகு கடையில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.70 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அடகுகடை

சுங்கான்கடை அருகே களியங்காடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 44). இவர் பரசேரியில் தனியார் பள்ளியின் அருகில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஐஸ்வர்யா என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் ஐஸ்வர்யா கடையில் இருந்தார். அப்போது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடைக்கு வந்தார். அவர், ஐஸ்வர்யாவிடம் நகை அடகு வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், 20 கிராம் எடை கொண்ட நகைகளை கொடுத்து ரூ.70 ஆயிரம் பெற்றுள்ளார்.

போலி நகை

அப்போது, அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஐஸ்வர்யா அவர், கொடுத்த நகைகளை சோதனை செய்தார். அப்போது, அந்த நகை மற்றும் அவர் கொடுத்த முகவரியும் போலியானது என தெரியவந்தது. இதற்கிடையே அந்த நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

பின்னர், இதுகுறித்து சிதம்பரம் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்