'மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' - டி.டி.வி. தினகரன்

உண்மையான அக்கறையோடு போலி மருத்துவர்களை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-04-12 11:59 GMT

சென்னை,

போலி மருத்துவர்கள் மீது பெயரளவில் நடவடிக்கை எடுக்காமல் உண்மையான அக்கறையோடு அவர்களை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என அ.ம.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி உரிய பதிவு இன்றி மருத்துவம் அளிப்போர் மீது தமிழ்நாடு காவல் துறை வழக்குகள் பதிவு செய்து 70-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுகின்றோம் என்று பெயரளவில் நடவடிக்கை எடுக்காமல் உண்மையான அக்கறையோடு போலி மருத்துவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கஞ்சா ஒழிப்பு என்ற பெயரில் இரண்டு ஆபரேஷன்களை போலீசார் மேற்கொண்ட போதும் இன்னும் கூட கஞ்சா விற்பனையும், அதனால் ஏற்படும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

எனவே, இனி பெயரளவுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இல்லாமல், மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்."

இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்