போலி டாக்டர் கைது

போலி டாக்டர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-06-23 19:25 GMT

மீன்சுருட்டி:

புகார்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பாசிக்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே நெல்லித்தோப்பு கிராமத்தில் கிளீனிக் வைத்து நடத்தி வருகிறார்.

இங்கு அவர் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து பெரம்பலூர் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் இளவரசன் மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார்.

கைது

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் நேற்று அந்த கிளீனிக்கிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் இல்லாமல் ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்