போலி டாக்டர் கைது

ஏர்வாடியில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-18 21:35 GMT

ஏர்வாடி:

நெல்லை மாவட்டம் ஏர்வாடி வடக்கு சேனையர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 63). இவர் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, பின்னர் பணகுடியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். அதனை தொடர்ந்து கிருஷ்ணன் வீட்டில் இருந்தபடி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரதுறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி பிரியதர்ஷினி ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.

தொடர்ந்து சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார், கிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான மாத்திரைகள், ஊசி மருந்துகள் இருப்பதும், அவர் சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிசிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்