போலி டாக்டர் கைது

ஆம்பூர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-08-24 18:37 GMT

ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஒருவர் சிகிச்சை அளிப்பதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மருத்துவ படிப்பு முடிக்காமல் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த வாணியம்பாடியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்