ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-10-30 13:30 GMT

சென்னை,

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் வருடம் மார்ச் 29-ந்தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். திருச்சி தில்லைநகரில் நடந்த இந்த கொலை வழக்கில் பல ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணை குழுவினர் இவ்வழக்கு சம்பந்தமாக தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 நபர்களான திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சுரேந்தர், சிவகுணசேகரன், கலைவாணன் உள்ளிட்டவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்