வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் முக கவசம், சமூக இடைவெளி கட்டாயம் - அமைச்சர் சேகர் பாபு
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.;
திருவல்லிக்கேணி,
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முககவசம், சமூக இடைவெளி போன்றவை நடைமுறையில் இருப்பதால் மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வைகுண்ட ஏகாதசி நாளில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சுழற்சி முறையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், திராவிட மாடல் ஆட்சியில் கோவில்களில் தீண்டாமை நிச்சயம் இருக்காது என்றும் தீண்டாமை என்பது இந்த ஆட்சியில் தீண்டாமலே சென்றுவிடும் என்றும் கூறினார்.