வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கண் சிகிச்சை முகாம்
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று சாலை பாதுகாப்பு விழாவையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது. முகாம் தொடக்க விழாவிற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் மகாலட்சுமி முகாமை தொடங்கி வைத்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார்.
முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் வைதேகி தலைமையில் மருத்துவ குழுவினர் பஸ், லாரி, வேன், ஆட்டோ ஓட்டுனர்கள், நடத்துனர்கள், பொதுமக்கள் 120 பேருக்கு கண் பரிசோதனை நடத்தினார்கள். இதில் 7 பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் உமா மகேஸ்வரி, போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.