அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்- கண்டக்டர்களுக்கு கண் பரிசோதனை

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்- கண்டக்டர்களுக்கு கண் பரிசோதனை;

Update: 2023-01-17 19:46 GMT

நாகர்கோவில், 

சாலை பாதுகாப்பு வாரவிழா கடந்த 11-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது. இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்- கண்டக்டர்கள் மற்றும் பணிமனைகளின் ஒர்க்ஷாப் பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கான கண் பரிசோதனை முகாம் நேற்று நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

முகாமை அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தி கண் பரிசோதனை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேலாளர் (வணிகம்) ஜெரோலின் லிஸ்பன்சிங், தொழில்நுட்ப மேலாளர் மது, தொழில் மேலாளர் அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கண் பரிசோதனை முகாமை ஐ பவுண்டேசன் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர். இதில் அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்கள், கண்டக்டர்கள், பணியாளர்கள் என மொத்தம் 300 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்