கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்
ராஜபாளையத்தில் அரசு மருத்துவமனை சார்பில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் அரசு மருத்துவமனை சார்பில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. காந்தி சிலை எதிரே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஊர்வலத்தை மருத்துவ துறை இணை இயக்குனர் முருகவேல் தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியிருந்தனர். காந்தி சிலை முன்பு புறப்பட்ட ஊர்வலம் தென்காசி சாலை மற்றும் பழைய பஸ் நிலையப் பகுதிகள் வழியாக மீண்டும் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகம் சென்றடைந்தது.