கண்தான இருவார விழா:தூத்துக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம்
கண்தான இருவார விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் 38-வது கண்தான இருவார விழாவை முன்னிட்டு கண்தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரணிக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, செவிலியர் பள்ளி துணை முதல்வர் கிருபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு ஊர்வலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கி, பாளையங்கோட்டை ரோடு, திருச்செந்தூர் ரோடு, சிதம்பரநகர் வழியாக மீண்டும் அரசு ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர் பயிற்சி மாணவர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கண்தானத்தின் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.