வாலிபரை மிரட்டி ரூ.30 ஆயிரம் பறிப்பு

நெல்லையில் வாலிபரை மிரட்டி ரூ.30 ஆயிரம் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-01 19:32 GMT

நெல்லை டவுன் ஏ.பி.மாடத்தெருவை சேர்ந்தவர் அருணாசலம் மகன் உச்சிமாகாளி என்ற ஜோதி (வயது 29). இவர் நெல்லை வடுகன்பட்டியில் உள்ள ஒரு ஆலையில் மேற்பார்வையாளாக பணியாற்றி வருகிறார். நெல்லை தாழையூத்தை சேர்ந்தவர் மதன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏ.பி.மாடத்தெருவில் இரவு நேரத்தில் சுத்தித்திரிந்ததாக உச்சிமாகாளி என்ற ஜோதி உள்ளிட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து அவரை பிடித்து கொடுத்துள்ளனர். இதனால் உச்சிமாகாளி என்ற ஜோதிக்கும், மதனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

சம்பவத்தன்று உச்சிமாகாளி தனது நண்பர் மகாராஜனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அங்கு கூட்டாளிகளுடன் வந்த மதன், கத்தியை காட்டி மிரட்டி அவர்களை கொக்கிரகுளம் ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று ரூ.30 ஆயிரத்தை பறித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் ரூ.2 லட்சம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசில் உச்சிமாகாளி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்