வங்கி ஊழியரிடம் ரூ.1¼ லட்சம் வழிப்பறி
பெரியமேடு பகுதியில் வங்கி ஊழியரிடம் ரூ.1¼ லட்சம் வழிப்பறி செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.;
ஆவடி விவேகானந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், வேளச்சேரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர், பெரியமேடு பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் சதீஷ்குமார் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். அந்த பணப்பையில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.