முதியவரை மிரட்டி பணம் பறிப்பு

முதியவரை மிரட்டி பணத்தை பறித்துச் சென்றனர்.;

Update:2023-09-10 00:45 IST

சிவகங்கையை அடுத்த வண்டவாசியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 60). இவர் உடையநாதபுரம் என்ற இடத்தின் அருகே ஆட்டுக்கிடை போட்டுள்ளார். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். கரும்பாவூர் விலக்கு அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் ஜெயபாலை வழிமறித்து வாளை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரொக்கம் ரூ.5 ஆயிரத்தையும் மற்றும் பொருட்களை பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்