வங்கி ஊழியரிடம் பணம் பறிப்பு

சேலம் தாதகாப்பட்டியில் வங்கி ஊழியரிடம் பணம் பறித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-10 20:21 GMT

இரும்பாலை

சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 35). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை தினேஷ்குமார் இரும்பாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 2 பேர் வழிமறித்தனர். அவர்கள் பாட்டிலால் தினேஷ்குமார் கழுத்தை கிழித்து, ரூ.13 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் இரும்பாலை போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்