ஆம்னி பஸ் புரோக்கரிடம் பணம் பறிப்பு
ஆம்னி பஸ் புரோக்கரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.;
திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஜமால் இப்ராகிம் (வயது 35). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ் புரோக்கராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள வ.உ.சி. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்த தினேஷ்(24) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ஜமால் இப்ராகிமிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு ஓடி விட்டார். இது குறித்து அவர் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.