விஷ வண்டுகள் அழிப்பு
வெங்கிடங்கால் கிராமத்தில் விஷ வண்டுகள் அழிக்கப்பட்டது.;
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியம் வெங்கிடங்கால் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இரண்டு பனைமரங்கள் மற்றும் ஒரு தென்னை மரத்தில் விஷவண்டுகள் கூடு கட்டி இருந்தன. இந்த விஷவண்டுகள் அந்த வழியாக செல்பவர்களை கடித்து வந்தது. .இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பசுமதி ரமேஷ்குமார் கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கீழ்வேளூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து விஷ வண்டுகளை தீவைத்து அழித்தனர்.