ராஜீவ் கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு
ராஜீவ் கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு எட்டாவது முறையாக பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.;
எட்டயபுரம்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரனுக்கு கடந்த ஆண்டு 15.11.2021 அன்று பரோல் வழங்கப்பட்டது. விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பநாயக்கன்பட்டியில் தங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து உடல்நலக் குறைவின் காரணமாக தமிழக அரசு தொடர்ந்து பரோல் நீட்டிப்பு செய்து வருகிறது. இன்றுடன்(வியாழக்கிழமை) அவருக்கு பரோல் முடிவடையும் நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது அவருக்கு எட்டாவது முறையாக பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது