நீடாமங்கலம் - பழைய நீடாமங்கலம் சாலை அகலப்படுத்தப்படுமா
நீடாமங்கலம்- பழையநீடாமங்கலம் சாலை அகலப்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.;
நீடாமங்கலம்;
நீடாமங்கலம்- பழையநீடாமங்கலம் சாலை அகலப்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பாலப்பணிகள்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே போக்குவரத்து பாலம் ஒன்று கட்டப்பட்டு பணிகள் பெருமளவு நிறைவடைந்துள்ளது. விரைவில் இந்த பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டால் வையகளத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராம மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
சாலை அகலப்படுத்தப்படுமா?
மேலும் நீடாமங்கலத்தில் ெரயில்வேகேட் மூடப்படும் நேரங்களில் தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக கொரடாச்சேரி, திருவாரூர் செல்லும் வாகனங்கள் பழையநீடாமங்கலம் புதிய பாலம் வழியாக செல்ல வாய்ப்புள்ளது.திருவாரூர் பகுதியிலிருந்து தஞ்சாவூர் செல்லக்கூடிய வாகனங்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி செல்வார்கள்.
அதே நேரத்தில் நீடாமங்கலம்- பழையநீடாமங்கலம் சாலையில் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே நீடாமங்கலம்- பழையநீடாமங்கலம் சாலையை அகலப்படுத்தி சாலையை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கவிடுத்துள்ளனர்.