இருளர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அபகரிப்பு

மரக்காணம் அருகே இருளர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அபகரிப்பு கலெக்டர் அலுவலகத்தில் புகார்;

Update: 2022-11-26 18:30 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கொல்லிமேடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- தமிழக அரசால், இருளர் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை மரக்காணம் தாசில்தார் பார்வையிட்டு விசாரணை அறிக்கை செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். நாங்கள் 27 குடும்பத்தினர் வீடு கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை சிலர் அபகரித்து கொட்டகை, வைக்கோல்போர், மாட்டுக்கொட்டகை அமைத்துள்ளனர். இவர்களால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும்போது வீட்டில் உள்ள பெண்கள், பிள்ளைகளை மிரட்டுவதும் வழக்கமாக உள்ளது. அங்குள்ள கடையில் எங்களுக்கு பொருட்கள் தரக்கூடாதென்றும் மிரட்டுகிறார்கள். எனவே மாவட்ட கலெக்டர், இதுகுறித்து நேரில் விசாரணை நடத்தி எங்களுக்கு ஒதுக்கிய இடத்தை மீட்டுத்தர வேண்டும். மேற்கண்டவாறு அம்மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்