வனப்பகுதிகளின் சிறப்பு தன்மை குறித்து பயிற்சி வனச்சரகர்களுக்கு விளக்கம்

வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக வனப்பகுதிகளின் சிறப்பு தன்மை குறித்து பயிற்சி வனச்சரகர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.;

Update: 2023-03-17 18:45 GMT

வால்பாறை

வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக வனப்பகுதிகளின் சிறப்பு தன்மை குறித்து பயிற்சி வனச்சரகர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

அழிந்து வரும் வனவிலங்குகள்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் உள்ள வனப்பகுதிகளின் சிறப்பு தன்மை குறித்து வனச்சரகர்களாக பயிற்சி பெற்று வரும் உத்தரபிரதேசம், ஒடிசா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மழைக்காடுகளை கொண்ட இந்த வனப்பகுதிகளில் வாழும் சாதாரண விலங்குகள், அழிந்து வரக்கூடிய வனவிலங்குகள், பறவைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே வாழ்ந்து வரக்கூடிய சிங்கவால் குரங்குகள் மற்றும் பறவைகளின் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

படக்காட்சிகள் மூலம்...

இது தவிர அரிய வகை வனவிலங்குகள், பறவைகள் இந்த வனப்பகுதிகளில் வாழ்வதற்கான முக்கிய காரணங்கள், இந்த வனப்பகுதிகள் மழை மேகங்களை ஏற்படுத்தி தவறாமல் பருவமழைகள் கிடைப்பதற்கு பெரிதும் உதவியாக இருப்பது, அதற்கு காரணமான செடி, கொடி, மரங்களின் சிறப்பு தன்மை குறித்து விளக்கப்பட்டது.

அத்துடன் இந்த வனப்பகுதிகள், வனவிலங்குகள், பறவைகளை பாதுகாக்க வனத்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு பணி குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தின் தகவல் மையத்தில் படக்காட்சிகள் மூலமும், வனப்பகுதிக்கு நேரில் அழைத்து சென்றும் இந்த பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர், இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்