புதுக்கோட்டை சாதி தீண்டாமை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

புதுக்கோட்டை சாதி தீண்டாமை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்தார்.

Update: 2022-12-28 17:32 GMT

சென்னை,

குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினர். அப்போது இரட்டைக்குவளை முறையை பின்பற்றிய டீக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் புதுக்கோட்டை சாதி தீண்டாமை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்தார். சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்தில் நடந்த சீராய்வு கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் கிராமம், வேங்கைவயலில் பட்டியில் இன மக்களை அந்த கிராமத்தில் உள்ள இதர வகுப்பை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்து வந்த நிலையில், நேற்று அம்மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இருவரும் இணைந்து பட்டியில் இன மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றது பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது.

இந்து கோயில்களில் நிலவும் சாதி தீண்டாமையை முறியடிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் சேலத்தில் உள்ள கோவிலில் சாதி தீண்டாமை உடைத்தெறியப்பட்டதைப் போல், புதுக்கோட்டை கோவிலிலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். புதுக்கோட்டை கோயிலில் சாதி தீண்டாமை கடைபிடிக்கப்பட்ட விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவிடம் பேசினேன்" என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்