திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் மொட்டை கோபுரத்தின் உறுதி தன்மை குறித்து வல்லுனர் குழு உறுப்பினர் ஆய்வு

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் மொட்டை கோபுரத்தின் உறுதி தன்மை குறித்து வல்லுனர் குழு உறுப்பினர் ஆய்வு

Update: 2022-11-26 20:21 GMT

மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது திருப்பைஞ்சீலி. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற நீலிவனநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் பரிகார தலமாகவும், எமனுக்கு என்று தனி சன்னதி உள்ள தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலின் பழைமை மாறாமல் புதுப்பித்து ராஜகோபுரம் கட்டி விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் இக்கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர். விரைவில் ராஜகோபுரம் கட்டப்படும் என்றும் கூறினர். இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இருந்து மாநில கட்டுமான வல்லுனர் குழு உறுப்பினர் பொறியாளர் முத்துசாமி நேற்று இக்கோவிலுக்கு வந்தார். அதன் பிறகு மொட்டை கோபுரத்தின் உறுதித் தன்மை, அதனுடைய நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து, யாகசாலை அமைக்கும் இடம், கோவிலில் உள்ள தீர்த்த குளங்கள், பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டார். இதனால், இக்கோவிலின் ராஜகோபுரம் கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வின்போது திருச்சி மண்டல அரசு ஸ்தபதி கார்த்திக், கோவில் செயல் அலுவலர் மனோகரன், கோவில் அர்ச்சகர் சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்