பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை முன்னரே அறிவிக்கும் வசதி மேலும் ஆயிரம் பேருந்துகளில் விரிவாக்கம்
சென்னையில் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை முன்னரே அறிவிக்கும் வசதி மேலும் ஆயிரம் பேருந்துகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது.;
சென்னை,
சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை 100 மீட்டர் தொலைவுக்கு முன்னரே அறிவிக்கும் திட்டம் ஏற்கனவே 150 பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயணிகள் எவ்வித சிரமமின்றியும், கால தாமதமின்றியும் பேருந்தில் இருந்து இறங்கிட உதவுகிறது.
இந்த வசதி மேலும் ஆயிரம் பேருந்துகளில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.