செயற்குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-10-25 00:15 IST

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர், பொருளாளர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் பாக்கியராஜ் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இணை செயலாளர் கமுதி ஜெயபாரதன், மாநில மகளிர் அணி செயலாளர் செந்தாமரை ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய வாரியாக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அச்சுந்தன்வயல் ஊராட்சி தலைவர் சசிகலா லிங்கம், ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், பாக்கியராஜ், சத்தியேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்