பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திரண்ட பெண்களால் பரபரப்பு

இலவச கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திரண்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-30 17:30 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வாரச் சந்தையில் இலவச கழிப்பிட வளாகம் உள்ளது. இந்த கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக மாற்ற முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பாப்பாரப்பட்டி பகுதி செயலாளர் லோகநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் பேரூராட்சி தலைவர் பிருந்தாவிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், இலவச கழிப்பிடமாக செயல்பட்டு வரும் வாரச்சந்தை கழிப்பிட வளாகத்தை ஏலம் விட்டு குத்தகைதாரர் மூலம் கட்டணம் வசூலிக்கும் பேரூராட்சி நிர்வாகத்தின் முடிவைக் கைவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜாமணி, ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் சிலம்பரசன், ராஜசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்