எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 17,501 பேர் எழுதுகின்றனர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 84 இடங்களில் 17,501 பேர் எழுதுகின்றனர்.

Update: 2023-04-05 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 84 இடங்களில் 17,501 பேர் எழுதுகின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் 8,359 மாணவர்களும், 8,480 மாணவிகளும், 497 தனி தேர்வர்களும், 165 மாற்றுத்திறனாளி தேர்வர்களும் என மொத்தம் 17,501 பேர் 84 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான பணியில் 1,264 கண்காணிப்பாளர்கள், 84 முதன்மை கண்காணிப்பாளர்கள், 84 துறை அலுவலர்கள் மற்றும் 148 பணியாளர்கள் கொண்ட பறக்கும்படை குழு பணி மேற்கொள்ள உள்ளனர். மேலும் மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் காவல்துறையின் மூலம் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

தயார் நிலை

அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் அச்சமின்றி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்