டி.என்.பி.எஸ்.சி. தேர்வு
ராமநாதபுரத்தில் 6 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தொகுதி-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கான டி.என்.பி.எஸ்.சி. எழுத்து தேர்வு நேற்று காலை மற்றும் பிற்பகலில் ராமநாதபுரத்தில் 6 தேர்வுமையங்களில் நடைபெற்றது. தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 1612 நபர்களில் காலை நடைபெற்ற தேர்வில் 755 நபர்கள் தேர்வு எழுதினர். 857 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. பிற்பகலில் நடைபெற்ற தேர்வில் 750 நபர்கள் தேர்வு எழுதினர். 852 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.