ஆண்டிப்பட்டி அருகே முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே முன்னாள் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2023-08-08 21:00 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் மொக்கையன் (வயது 69). முன்னாள் ராணுவ வீரர். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மொக்கையன் பாலக்கோம்பை அருகே உள்ள நாகலாறு ஓடை பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கு விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜதானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மொக்கையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்