ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் இருந்தால் கோவை முகாமில் முன்னாள் படை வீரர்கள் பங்கேற்று பயன்பெறலாம்

முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் இருந்தால் கோவையில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-09-24 18:45 GMT


முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் இருந்தால் கோவையில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

முகாம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் கோவை மாவட்டத்தில் டிபென்ஸ் பென்சன் அதாலத் சி.டி.ஏ. சென்னை அலுவலகத்தால் முகாம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருந்தால், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள இந்த முகாமில் வருகிற 12.10.2023 மற்றும் 13.10.2023 ஆகிய நாட்களில் நேரடியாக கலந்துகொள்ளலாம்.

அனுப்பி வைக்கலாம்

மேலும், அவ்வாறு நேரடியாக கலந்து கொள்ள இயலாதவர்கள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து, அதனுடன் படைவிலகல் சான்று நகல், ஓய்வூதிய ஆணை நகல், கோரிஜெண்டம் பிபிஓ, ஸ்பார்ஸ் பிபிஓ, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் கடைசி 2 பக்கங்களின் நகல்கள் ஆகியவற்றுடன் டிபென்ஸ் பென்சன், அதாலத் அலுவலர், சி.டி.ஏ. 618 அண்ணாசாைல, சென்னை 600018, மின்னஞ்சல் முகவரி legaladalatcdachn@gmail.com ஆகியவைகளில் அனுப்பி வைக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04575-240483 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்