1,031 மதுபாட்டில்களுடன் முன்னாள் ராணுவ வீரர் கைது

1,031 மதுபாட்டில்களுடன் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-03-12 20:13 GMT

மேலூர்

மேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் மண்டல நுண்ணறிவு போலீசார் கருப்பாயூரணி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முன்னாள் ராணுவ வீரர் நாகராஜ் (வயது 56) என்பவர் மிலிட்டரி ரக மதுபாட்டில்களை விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை கைது அவரிடமிருந்து (750 மில்லி) அளவுள்ள 1,031 மிலிட்டரி ரக மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்