மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது முன்னாள் நிர்வாகி போலீசில் புகார்!

தனது உணவகம் அபகரிக்கப்பட்டதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாக அண்ணாதுரை புகாரில் குறிப்பிட்டுள்ளார்.;

Update: 2023-05-25 08:29 GMT

கோவை,

கோவை உள்ளிட்ட இடங்களில் உணவகம் நடத்தி வருபவர் அண்ணாதுரை. கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனது உணவகத்தை அபகரித்து பாஜக அலுவலகம் நடத்துவதாக அண்ணாதுரை கோவை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தான் வாடகைக்கு எடுத்திருந்த உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கியிருப்பதாகவும், வழக்கு நிலுவையில் உள்ளபோதே தனது உணவகத்தில் இருந்த பொருட்களை பாஜகவினர் அள்ளிச் சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனது உணவகம் அபகரிக்கப்பட்டதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாக அண்ணாதுரை புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்