கோட்டூர்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு அகற்றம்: 1,476 குடியிருப்புதாரர்களுக்கு தலா ரூ.24 ஆயிரம் கருணை தொகை - அமைச்சர்கள் வழங்கினர்

கோட்டூர்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு அகற்றம்: 1,476 குடியிருப்புதாரர்களுக்கு தலா ரூ.24 ஆயிரம் கருணை தொகையை அமைச்சர்கள் வழங்கினர்.

Update: 2022-06-25 05:55 GMT

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் சென்னை கோட்டூர்புரத்தில் 1974-ம் ஆண்டு கட்டப்பட்ட 1,476 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடித்து விட்டு புதிய குடியிருப்பு கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இங்கு குடியிருந்து வந்தவர்களுக்கு கருணை தொகை வழங்கும் நிகழ்ச்சி கோட்டூர்புரத்தில் நடந்தது. தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் 1,476 குடியிருப்புதாரர்களுக்கு கருணை தொகையாக தலா ரூ.24 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3.54 கோடிக்கு காசோலை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் ம.கோவிந்தராவ், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்