இ.எஸ்.ஐ. பயனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. பயனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.;

Update: 2023-06-06 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. கிளை மேலாளர் ஈ.பிரபாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. கிளை அலுவலகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனை பயனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை டாக்டர்கள், அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். அன்றைய தினம் பயனாளிகள் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்