ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: வேட்பாளர்கள் யார்... யார்...?

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-21 06:05 GMT

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2011, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர்.

அதுபோல் ஓ.பிஎஸ் அணிதரப்பிலும் போட்டியிடப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது. வேட்பாளராக புகழேந்தி அல்லது வேறு யாராவது அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதுதவிர பா.ஜனதா மேலிடம் அனுப்பிய ரகசிய குழு ஒன்றும் ஈரோட்டில் சர்வே நடத்தி உள்ளது. இதற்கிடையில் பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசில் போட்டியிட்ட திருமகன் ஈெவரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இது 44.27 சதவீதம் ஆகும். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58,396 வாக்குகள் பெற்றார். இது 38.41 சதவீதம் ஆகும்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது மற்றொரு மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமா ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்பதால் காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்