ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல்...!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-01-28 06:47 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது.

அக்கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அத்துடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திடம் காங்கிரஸ் ஆதரவு கோரிய நிலையில் அக்கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி என தனிதனியாக களமிறங்குகிறது. பாமக, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்