கருமந்துறை பகுதியில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு-போலீசார் நடவடிக்கை

கருமந்துறை பகுதியில் 1000 லிட்டர் சாராய ஊறலை அழித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.;

Update: 2023-10-26 21:09 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:

சேலம் மாவட்டம் பெரியகல்வராயன் மலை, சடையம்பட்டி மலை கிராம பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் 3 பிரிவுகளாக பிரிந்து சோதனை நடத்தினர். அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக 6 பேரல்களில் வைக்கப்பட்டு இருந்த 1000 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் சாராய வியாபாரிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்