மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

பள்ளிக்கல்வி துறை சார்பில் கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2023-01-07 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிக்கானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதூரில் உள்ள பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் பள்ளிக்கல்வி துறை சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கிருஷ்ணகிரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக் தலைமை தாங்கினார். கட்டிக்கானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திம்மராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சி.பி., கார்னர் நாற்காலிகள், வாக்கர்கள், ஏர் பெட், உருப்பெருக்கி, நிற்கும் பலகை உள்பட உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 379 மாற்றுத்திறன் மாணவர்கள், ஒன்று முதல் பிளஸ்-2 வகுப்பில் படித்து வருகிறார்கள். சிறப்பு பயிற்றுனர் மூலம் அவர்களுக்கு கல்வி மற்றும் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, 2 முதல், 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கற்றல் அடைவு திறன் தேர்வு நடக்கிறது. மாற்றுத்திறன் மாணவர்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்றுனர்கள் அருண்குமார், ஜித்தன், சத்யா, நித்யகலா மற்றும் பள்ளி ஆயத்த மைய பராமரிப்பாளர் கல்பனா, உதவியாளர் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்