பள்ளிக்கூடத்தில் சமத்துவ பொங்கல் விழா
எட்டயபுரம் பகுதியில் பள்ளிக்கூடத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே ராமனூத்து கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராஹிம், பள்ளி குழந்தைகள் மற்றும் கிராம மக்களுடன் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடி கிராமத்து பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
இதேபோல் எட்டயபுரம் வீரபாகு வித்யாலயா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.