விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா
விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் ரங்கோலி கோலமிட்டு, கரும்புகள் மற்றும் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. பாரம்பரிய முறைப்படி புடவை அணிந்து வந்து பெண் வழக்கறிஞர்கள் குலவையிட்டபடி பொங்கல் வைத்தனர். விழாவில் விளாத்திகுளம் நீதிபதி ராம் கிஷோர், அரசு வழக்கறிஞர் ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.