கும்மிடிப்பூண்டியில் சாலையோரம் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு; பொதுமக்கள் புகார்

கும்மிடிப்பூண்டியில் சாலையோரம் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் எரிப்பதை கைவிட வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-12-22 12:06 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட சாமிரெட்டிகண்டிகையில் உள்ள பிரதான ஜி.என்.டி. சாலையில் குப்பை கழிவுகளை கொண்டு வந்து கொட்டி அங்கேயே ஊராட்சி நிர்வாகத்தினர் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் கடந்து செல்பவர்களுக்கு புகை சூழ்ந்து கண் எரிச்சல் ஏற்பட்டு விபத்துக்கு வழிவகுக்கிறது. மேலும் இத்தகைய சுற்றுச்சூழல் சீர் கேட்டால் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் பெருமளவில் பாதிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே கும்மிடிப்பூண்டியின் பிரதான சாலையான ஜி.என்.டி. சாலையில் பெத்திக்குப்பம் ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை தீ வைத்து எரிப்பதை கைவிட வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்