புவி வெப்பமடைவதை தடுக்க சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க வேண்டும்-இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பேச்சு

புவி வெப்பமடைவதை தடுக்க சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க வேண்டும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி கூறினார்.;

Update: 2023-03-09 18:32 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நடந்த தனியார் பள்ளி விழாவில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது:- புவி வெப்பமடைவதை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். விவசாய விளை நிலங்களில் எரிக்கப்படும் மாசு மற்றும் வாகன பயன்பாடுகளால் ஏற்படும் மாசுபாட்டையும் குறைத்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிக்கும் காலம் விரைவில் வரும்.குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் முக்கியமோ அதேபோல் தான் தமிழ்வழி கல்வியும் குழந்தைகளுக்கு அவசியமான ஒன்றாகும். ஆங்கில வழி கல்வியை விட தமிழ்வழி கல்வி தான் பள்ளி மாணவர்களுக்கு சாலச்சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்