கடையம்:
கடையம் அருகே உள்ள வெங்காடம்பட்டி டிரஸ்ட் - இந்தியா பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் நடைபெற்றது. பள்ளி கோடை விடுமுறை என்பதால் பள்ளிக் குழந்தைகளை அழைக்காமல் புலம் பெயர்ந்த வடமாநில குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளைக் கொண்டு அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் குழந்தைகள் இல்லம் பூ.திருமாறன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சாந்தி, சூழல் ஆராய்ச்சியாளர் சாமிதோப்பு இரா.பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி தொடங்கி வைத்து பேசினார்.
பிரபல தோல்பாவைக் கூத்து கலைஞர்கள் ஆரல்வாய்மொழி லட்சுமணராவ், நாகராணி, முத்துவேலன் குழந்தைகளுக்கு பாரம்பரிய பழங்கலையான தோல்பாவைக் கூத்து மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக மேற்கு வங்கத்து குழந்தைகள் மரக்கன்று நடவு செய்தனர். ரெயில் விபத்தில் இறந்தவர்கள் நினைவாக 280 மரக்கன்றுகள் நட்டு முடிக்க இலுப்பை மரக்கன்றுகளை சமூக நல ஆர்வலர் திருமாறன் வழங்கினார். தொடர்ந்து மருவி வரும் கலைகளையும் மாண்டு வரும் மர இனங்களையும் காப்பது மக்களின் கடமை என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.