வீடு இல்லாதோர் குறித்து கணக்கெடுக்கும் பணி
தளி ஒன்றியத்தில் வீடு இல்லாதோர் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்தது.
தேன்கனிக்கோட்டை
தளி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் வீடு இல்லாதோர் குறித்து அலுவலர்கள் கிராமம், கிராமமாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வீடு இல்லாதோர் குறித்து புள்ளி விவரங்கள் சேகரித்தனர். கொமாரணப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற ஆய்வு பணியை தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி பார்வையிட்டார். அப்போது பயனாளிகளை முறையாக கணக்கெடுக்க வேண்டும். அலுவலா்களிடம் ஆவணங்கள் வழங்கி பயனடையுமாறு கிராம மக்களை கேட்டுக்கொண்டார்.