வாரணாசி புனித யாத்திரை ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு

செங்கோட்டையில் வாரணாசி புனித யாத்திரை ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2023-05-05 18:45 GMT

செங்கோட்டை:

ரெயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில், பாரத் கவுரவ் யாத்திரை சுற்றுலா திட்டத்தின் கீழ் திருவனந்தபுரத்தில் இருந்து வாரணாசிக்கு புனித யாத்திரை சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. அந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தது. அங்கு அந்த ரெயிலுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த ரெயிலில் வாரணாசி புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கு செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் இனிப்பு வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்